எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படம் போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்து, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
வலிமை திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 34 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும், இப்படம் உலகளவில் மொத்தம் சுமார் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு வலிமை படம் குறித்து முதன் முறையாக தனது நேர்மையான விமர்சனத்தை கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு, வலிமை படம் நன்றாக இருந்தது என்றும் ஸ்டண்ட் எல்லாம் சூப்பர் என்றும் கூறினார். ஆனால், நான் வலிமை படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகம் வைத்ததால் இப்படம் எனக்கு முழு திருப்த்தியை தரவில்லை என்று கூறினார். மேலும், எச். வினோத்தின் டீடைலிங் எனக்கு மிகவும் புடிக்கும், ஆனால், எதோ ஒரு இடத்தில் வலிமை படம் எனக்கு முழு திருப்த்தி தரவில்லை என்று நேர்மையாக விமர்சனத்தை கூறினார்.

