இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் தர்பார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை முருகதாசுக்கு இப்படம் ஒரு தோல்விப் படமாக அமைந்தது. தர்பார் படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்தையும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவில்லை.
இந்நிலையில், தர்பார் படத்திற்கு பின் முருகதாஸ் தமிழில் மீண்டும் வேற லெவல் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவின் பெரிய தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோவாக சீயான் விக்ரம் கமிட்டாகியுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் இப்பொழுது மற்றொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அது, இப்படத்தில் சியான் விக்ரம் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பதாகும்.
இச்செய்தி குறித்து விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என எதிர்பாக்கப்படுகிறது.

