தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

இதைத்தொடர்ந்து விஜய் தற்பொழுது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும்  பீஸ்ட் படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் பீஸ்ட் படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து  தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபல்லி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தளபதி விஜய் தான் நடிக்கும் படங்களின் இயக்குனர்களை தேர்வு செய்வதில் கெட்டிக்காரர்.  நிறைய படங்களை பார்த்து  அலசி ஆராய்ந்து பின்புதான் இயக்குனர்களை தேர்வு செய்வார்.

அப்படிதான் தளபதி விஜய் லோகேஷ்  மற்றும் நெல்சன்  ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இதனால்தான் சமீபகாலமாக விஜய் நடிப்பில் வெளியாகும் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்ஆவதுடன் வசூல் சாதனையும் படைத்து வருகிறது.

அந்த வரிசையில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் ஹெச் வினோத். ஹெச் வினோதின் முதல் படமான சதுரங்க வேட்டை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரின் அடுத்த தீரன் அதிகாரம் ஒன்று படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.  இந்தப் படத்தை பார்த்துவிட்டு தளபதி விஜய் வினோத்தை தேர்வு செய்து வைத்துள்ளார்.

பின்பு வினோத், போனி கபூர் தயாரிப்பில் அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். இப்படம்  மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று மிகப் பெரிய ஹிட்டானது.  அதனால் மீண்டும் இதே கூட்டணியில்  உருவான படம் வலிமை. வலிமை திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் சில எதிர்மறையான விமர்சனங்களும் வருகிறது.

வலிமை படத்தின்  கலவையான விமர்சனத்தை பார்த்தபின் தளபதி விஜய் ஹெச் வினோத்தை தற்காலிகமாக ஒதுங்கி வைத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.


Previous Post Next Post