நேர்கொண்ட பார்வை படத்துக்குப்பின் எச் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் வலிமை. கொரோனா காரணமாக வலிமை திரைப்படம் 2 வருடமாக வெளிவராமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்த நிலையில் காத்திருப்புக்கு பலனாக வலிமை திரைப்படம் இன்னும் சில நாட்களில் ரசிகர்களுக்கு விருந்தாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதனால் இந்த படத்திற்காக அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர் மற்றும் பாடல்கள் என்று அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
அதுமட்டுமல்லாமல் தற்போது வலிமை திரைப்படம் பல சாதனைகளை படைத்து வருகிறது.
உலக அளவில் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் வலிமை திரைப்படம் சுமார் 300 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது.
வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இதுவரை வெளியான எந்த திரைப்படங்களும் இதுபோன்ற ஒரு வியாபார சாதனையை படைத்தது இல்லை என்று மிகவும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது வலிமை படம் செய்த ஒரு சாதனையை விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படம் முறியடித்துள்ளது.
அதாவது நெல்சன், அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியிருக்கும் அரபிக் குத்து என்ற பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாகவே இந்தப் பாடல் உருவாகும் ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இதனால் இந்த பாடலை எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது அரபிக் குத்து பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதிலும் இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே அதிக அளவு பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் இந்தப் பாடல் வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடல் நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளது.
இதனால் பீஸ்ட் திரைப்படம் வலிமை திரைப்படத்தை விடவும் அதிகமாக 500 கோடிக்கு வியாபாரம் ஆகும் என்ற கருத்து நிலவி வருகிறது.