பிரம்மாண்ட இயக்குநர் என்றால் அது ஷங்கர் தான். இவர் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சங்கர் நேரடியாக தெலுங்கில் இயக்கும் முதல் படம் இது. பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் படம் பொங்கலுக்கு வெளியிட  திட்டமிடப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடிக்கும் திரைப்படம் RC15. இது ராம்சரணின் 15வது படம் என்பதால் இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 8ந் தேதியிலிருந்து  நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இப்படத்தில்  நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யா அஜித்தை வைத்து வாலி மற்றும் விஜய்யை வைத்து குஷி என்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர்.

பின்பு இவர் நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் சைக்கோ வில்லனாக அசத்தி இருந்தார்.



வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா சிம்புவிற்கு வில்லனாக நடித்தார்.
இப்படத்தில் ஸ்.ஜே. சூர்யாவின் வில்லத்தனம் மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது.

அந்த படத்தில்  வந்தான் சுட்டான் ரிப்பீட்டு... வந்தான் சுட்டான் ரிப்பீட்டு... என மாஸான வசனத்தை பேசி தெறிக்கவிட்டு இருப்பார்.
இந்த வசனம் இணையதளத்தில் மிகவும் வைரல் ஆனது.
இப்படத்திற்கு பின்பு எஸ்.ஜே. சூர்யாவுக்கு  வில்லனாக நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

தற்பொழுது ராம்சரண் நடிக்கும் RC15 படத்தில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூரியாவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் 7 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் எஸ் ஜே சூர்யா கலந்து கொள்ள உள்ளார்.



ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸுக்கு பிறகே RC15 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும்.

Previous Post Next Post