வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. இந்த வெற்றிக்கு பிறகு சிம்பு தற்போது அவர் கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார்.
மேலும் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தற்போது தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் சிம்புவின் நடிப்பில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த படங்கள் எல்லாம் தற்போது வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார்.
இவரின் முதல் படமான வேட்டை மன்னன் சிம்பு நடிப்பில் உருவாகி பாதியில் கைவிடப்பட்டது.
தற்பொழுது வேட்டை மன்னன் படம் திரும்ப ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதனை அடுத்து நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். மேலும் இவர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தையும் இயக்கியுள்ளார்.
மேலும் நெல்சன் திலீப்குமார் சூப்பர் ஸ்டாரின் 169 வது படத்தை இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை மிக பிரமாண்டமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டாரின் படத்தை முடித்து விட்டு அடுத்ததாக நெல்சன் வேட்டை மன்னன் படத்தை திரும்பவும் ஆரம்பிக்க இருக்கிறார்.
சிம்புவின் ரசிகர்களுக்கு வேட்டை மன்னன் படம் கைவிடப்பட்டது வருத்தமாக இருந்தது. இப்பொழுது இப்படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கும் செய்தி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.