இந்திய சினிமாவே ஆச்சரியத்துடன் வியந்து பார்க்கும் அளவிற்கு மிக பிரமாண்ட திரைப்படங்களை கொடுப்பவர் தான் இயக்குனர் ராஜமௌலி. இவர் பாகுபலி என்ற பிரமாண்ட படங்களை கொடுத்தார். அதை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் RRR திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியது.
இப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து உலகமுழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் RRR படம் வெளியாகி உலகமுழுவதும் சுமார் 710 கோடி அளவில் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அறிவித்துள்ளனர்.
இதனிடையே பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி குறித்து மற்றுமொரு பிரமாண்ட செய்தி வெளிவந்துள்ளது. அது, அடுத்து அவர் மகேஷ்பாபுவை ஹீரோவாக வைத்து படம் இயக்கவுள்ளார் என்பதாகும். இப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 800 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப் போகிறதாம்.
இப்படத்தின் அதிகப்படியான காட்சிகளை ஆப்பிரிக்கா காடுகளில் படமாக்க இருப்பதாகவும், இப்படம் ராஜமௌலியின் முந்தைய படங்களான பாகுபலி, RRR படங்களை விட பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
