போக்கோ நிறுவனமானது MWC 2022 நிகழ்வில் புதிதாக இரண்டு  ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது.



அது போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி(Poco X4 Pro 5G)மற்றும் போக்கோ எம்4 ப்ரோ ( Poco M4 Pro)ஆகும்.

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 108 எம்பி(108 MP Wide Angle Primary Camera) கேமரா உட்பட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்ட போக்கோவின்வின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி  ஸ்மார்ட்போன் ஆனது  குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (67W Turbo Charging; USB Type-C port) ஆதரவோடு வருகிறது. 

மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே(120 Hz Refresh Rate) மற்றும் 5000 எம்ஏஎச் கொண்ட பேட்டரி உடன் வருகிறது.

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி விவரக்குறப்புகள் குறித்து பார்க்கையில், போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது
1,080 x 2,400 பிக்சல்கள் தீர்மானம்
(Resolution :1080 x 2400 pixels)

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
(Refresh Rate : 120 Hz)

  1200 நிட்ஸ் உச்ச  பிரகாசம்
(Brightness : 1200 nits)

6.67-இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே
( Display : 6.67 inches (16.94 cm); AMOLED)

ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
(Processor : Qualcomm Snapdragon 695) மூலம் இயக்கப்படுகிறது.



இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி வரை ரேம் மற்றும் 11 ஜிபி வரை டைனமிக் ரேம் விரிவாக்க ஆதரவை இது கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலமாக 1 டிபி வரை மெமரி (Expandable Memory : Up to 1 TB) விரிவாக்க ஆதரவைக் கொண்டிருக்கிறது.

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எம்ஐயூஐ 13 ஸ்கின்
(Operating System : Android v11
Custom UI : MIUI )
மூலம் இயங்குகிறது.

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 108-மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என மூன்று பின்புற கேமரா அமைக்கப்பட்டுள்ளது.  16 மெகாபிக்சல் கொண்ட முன்புற செல்பி கேமராவை கொண்டிருக்கிறது. மேலும் இதில் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது  மற்றும் இது 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்  கொண்டுள்ளது.



போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்  6 ஜிபி ரேம்/ 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் / 128 ஜிபி மெமரி  என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
இதில் 6 ஜிபி ரேம்/ 128 ஜிபி மெமரி வேரியண்ட் இன்  இந்திய விலை  ரூ.25,300 ஆகும்.

அதேபோல் 8 ஜிபி ரேம் / 128 ஜிபி மெமரி வேரியண்ட் இன்  இந்திய விலை ரூ.29,500 ஆக இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் லேசர் பிளாக், லேசர் ப்ளூ மற்றும் போக்கோ மஞ்சள் ஆகிய  மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.


இந்த ஸ்மார்ட்போன்  மார்ச் 2 முதல்  விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி(Poco X4 Pro 5G) தற்போது வரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post