சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கின்றது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார்.
எதற்கும் துணிந்தவன் படம் இம்மாதம் (மார்ச் 10-ம் தேதி) வெளியாக இருக்கிறது.
இது குறித்து சென்னையில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் பேசிய நடிகர் சத்யராஜ், திரையில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும் சூர்யா எதற்கும் துணிந்தவன் தான் என்று பாராட்டியுள்ளார்.
மேலும் அவர் ஜெய்பீம் போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்ததே துணிவு தான் அதனால் சூர்யாவிற்கு "புரட்சி நாயகன்" சூர்யா என பட்டம் கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சத்யராஜ் கூறியது அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் கருத்துகளை திரைப்படங்களில் அதிகம் காட்ட வேண்டும். சூர்யாவின் ரசிகர்களும் அவரை பின்பற்ற வேண்டும் என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.