இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு வலிமை திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனையடுத்து ஹெச் வினோத் அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் இந்த படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.
மேலும் இந்தப் புதிய படத்தை வலிமை படம் அளவுக்கு இழுக்காமல் குறுகிய காலத்திலேயே எடுத்து முடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இப்படி இருக்கையில் வலிமை படத்தில் இவர்களுக்கு இடையில் ஏதோ மனக் கசப்பு ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் அடுத்த படம் இவர்கள் பண்ணவில்லை என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
மேலும் போனி கபூர், எச் வினோத் இயக்கத்தில் விஜய்சேதுபதியை வைத்து ஒரு படம் பண்ணப் போவதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
இந்தப் படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நகைச்சுவை கதாபாத்திரமாக இல்லாமல் ஹீரோவுக்கு நிகரான ஒரு கேரக்டரில் தான் யோகி பாபு நடிக்க இருக்கிறார். சமீபகாலமாக யோகி பாபு நடிக்கும் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் யோகி பாபு ஒரு வலுவான கதாபாத்திரத்தில் தான் விஜய் சேதுபதியுடன் இணைய இருக்கிறார்.
தயாரிப்பாளரான போனி கபூர் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்பட்டு மிக விரைவில் இந்த படத்தை முடித்துவிட வேண்டும் என்று இயக்குனர் வினோத் உறுதியாக இருக்கிறார்.