கமல்ஹாசன் நடிக்கும்  விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
இப்படத்தில்  விஜயசேதுபதி வில்லன் கதாபத்திரத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியும் கமலும் மோதும் சண்டைக் காட்சிகள் மிக பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.

கமலின்  தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்   இப்படத்தை தயாரித்திருக்கிறது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாக  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும் இப்படத்தில் கமல், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய மூன்று முன்னணி கதாநாயகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இந்தப் படத்துக்கு  இசையமைக்கிறார்.

கைதி படம் கதை போலவே குறுகிய காலத்தில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது இப்படம். வெளியூரில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தும் சென்னையில் செட் போட்டு எடுத்தனர்.

  வில்லனாக விஜயசேதுபதி நடித்திருக்கிறார்.  விஜய் சேதுபதிக்கும் கமலுக்கும் இடையில் நடக்கும் சண்டை காட்சிகள் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு இருக்கிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததை கமல்ஹாசன், லோகேஷ்  மற்றும் படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர். 
விக்ரம் படத்தை ஏப்ரல் மாதம்  திரைக்கு கொண்டுவர  படக்குழு முடிவு செய்துள்ளனர்.

Previous Post Next Post