சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்ஸி A03 (Samsung Galaxy A03) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது . இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல் ஆன்லைனில் கசிந்துள்ளது.
தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி A03 மாடல் ரூ.11,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மாடல் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
டிஸ்பிளே:
சாம்சங் கேலக்ஸி A03 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் HD+ இன்பினிட்டி-வி 720 x 1600 pixels, 20:9 ratio (~270 ppi density)டிஸ்பிளே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் அந்நிறுவனம்.
பிராசஸர்:
கேலக்ஸி A03 ஸ்மார்ட்போனில் Unisoc chipset ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளதாக. மேலும் ஆண்ட்ராய்டு 11
(OS -Android 11) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
கேமரா:
A03 ஸ்மார்ட்போனின் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டுகேமராக்கள் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 5 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது A03 மாடல்.
பேட்டரி:
சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி(Li-Po 5000 mAh, non-removable) பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.
மெமரி:
3ஜிபி ரேம்/32ஜிபி மெமரி, 4ஜிபி ரேம்/64ஜிபி மெமரி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
நெட்வொர்க்:
4 ஜி எல்டிஇ (4G - LTE)dual-SIM , வைஃபை(Wifi),புளூடூத்(Bluetooth), ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி (microUSB Type-C) போர்ட் ஆகியவை உள்ளது.
விலை:
3ஜிபி ரேம்/32ஜிபி - 10,499
4ஜிபி ரேம்/64ஜிபி - 11,999