கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த க.மாமனந்தல் கிராம எல்லைப் பகுதியில், இஸ்மாயில் என்பவர் சொந்தமான பட்டாசு குடோன் வைத்து நடத்தி வந்துள்ளார்.
இன்று காலை (14-03-2022), கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் வேலைக்காக பட்டாசு குடோனுக்கு சென்றுள்ளார். அப்போது, குடோனில் இருந்த பட்டாசுகள் எல்லாம் எதிர்பாராவிதமாக வெடித்து சிதறின. இச்சம்பவத்தில் அந்த கட்டடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இந்த கோர விபத்தில் சிக்கிய ஏழுமலை உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து, தீ விபத்து நடந்த பட்டாசு குடோனுக்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசாரும், தீயணைப்பு துறையினரும் ஏழுமலை உடலை மீட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.