தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து பின்பு இயக்குனர் கோகுல் இயக்கத்தில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி. அதன் பின்பு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா மற்றும் சூது கவ்வும் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் விஜய் சேதுபதி. தற்போது இவர் தமிழில் விக்ரம், விடுதலை மற்றும் காத்துவாக்குல 2 காதல் ஆகிய படங்களிலும் மேலும் மாநகரம் இந்தி ரீமேக் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இது தவிர விஜய் சேதுபதி நடிப்பில் உருவான கடைசி விவசாயி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இனி சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதை குறைத்துவிட்டு ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளாராம்.