சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பின்பு வினோத்துக்கு அஜீத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது அதன்மூலம் நேர்கொண்ட பார்வை படத்தை அஜித்தை வைத்து இயக்கி மிகப்பெரிய வெற்றியடைந்தது.
அவர் நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பின் மீண்டும் அஜித்தை வைத்து எடுத்த படம் வலிமை. அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், எங்கேயோ லேசாக சறுக்கல் அடைந்தது.
வலிமை படம் இயக்குனர் எச்.வினோத்தின் ஒரிஜினல் கதையே இல்லையாம், படத்தில் வினோத்தின் விருப்பமில்லாமல் அஜித்திற்காகவும், ரசிகர்களுக்காகவும் நிறைய மாற்றங்கள் செய்து படத்தை கெடுத்து விட்டனர் என்று ரசிகர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தற்பொழுது அஜித் நடித்துக் கொண்டிருக்கும் AK 61 படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். முன்னதாகவே இந்த கதையைத்தான் வினோத் அஜீத்திடம் கூறியிருக்கிறார், அதைத்தான் வலிமையாக மாற்றிவிட்டனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
AK 61 படத்தில், எவ்வளவு பெரிய திருடனாக இருந்தாலும், எவ்வளவு புத்திசாலித்தனமாக திருடினாலும், திருடர்கள் தங்களுக்கு தெரியாமல் ஏதாவது ஒரு அடையாளத்தை அங்கேயே விட்டு சென்று மாட்டிக் கொள்வார்கள்.
இப்படத்தில் அதையும் தாண்டி எப்படி மாட்டிக்கொள்ளாமல் புத்திசாலித்தனமாக திருடுவது, போலீஸிடம் இருந்து எப்படி தப்பிப்பது போன்ற குற்ற செயல்களின் பின்னணி தான் இந்த கதையும்.
இந்த கேரக்டரில், அஜித்திற்காகவே சில டெக்னிக்கல் விஷயங்களை கண்டுபிடித்துள்ளார்கள். இப்படம் வலிமை படம் போல் ரொம்ப நாட்கள் இழுக்காமல் சீக்கிரம் ரெடி ஆகி விடுமாம்.