பிரேம்ஜி அவர்கள் நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வருகிறார் , இவர் தற்போது பிரபல நடிகருக்கு வில்லனாக நடித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் தற்போது SK 20 எனும் படத்தில் நடித்து வருகிறார் . SK 20 படத்தின் சூட்டிங் சித்தூர் மட்டும் ஆந்திராவில் படு விரைவாக நடந்து வருகின்ற நிலையில், இந்த படத்தை எவ்வளவு விரைவாக எடுத்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடியுங்கள் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக SK 20 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு அப்பா வேடத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார்.

SK 20 படத்தில் சிவாவுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த வெளிநாட்டு மாடல் அழகி ஒருவர் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவா இப்படத்தில்  குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

சூர்யா, அஜித், சிம்பு, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்து அசத்திய பிரேம்ஜி, தற்பொழுது வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். ஆம் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ் கே 20 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் பிரேம்ஜி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரேம்ஜி வில்லனாக நடிப்பது அவருக்கே காமெடியாக இருக்கும். அவரை ரசிகர்கள் வில்லனாக ஏற்றுக்கொள்வது என்பது பெரும் சந்தேகம் தான்.

Previous Post Next Post