தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் வெற்றிமாறன். தற்போது அவர் விடுதலை எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. விடுதலை படத்திற்கு பின் அவர் வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

கலைபுலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகிறது. இப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.  இப்படத்தில் தான் பிரபல நடிகர் கருணாஸ் இயக்குனர் வெற்றிமாறனுக்கு உதவி இயக்குனராக பணிபுரிய போகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து கருணாஸ் கூறியது, என் கலை வாழ்வை கிராமிய கானா பாடகராக  துவங்கியிருந்தாலும் இவ்வளவு பெரிய அடையாளத்தையும், அறிமுகத்தையும் எனக்கு கொடுத்தது  சினிமாதான். தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க வேண்டும் என்று நான் இப்போது முடிவெடுத்துள்ளேன்.

இந்த வாடிவாசல் திரைப்படத்தின் மூலம்  என்னுடைய உதவி இயக்குனர் கனவு  நனவாகி இருக்கிறது என்று கருணாஸ் கூறியிருக்கிறார்.

Previous Post Next Post