தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வசூல் சக்கரவர்த்தியாக இருக்கிறார். இதனால் விஜய்யின் படங்களுக்கு தமிழில் மொழியில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் கூட ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தளபதி விஜய்  தற்போது முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கால்பதிக்க உள்ளார்.

இந்நிலையில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க இதில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பே பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், வரும் ஏப்ரல் 14 ம் தேதி பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் கேஜிஎஃப் 2 படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது.

பிரபல கன்னட நடிகரான யாஷ் மற்றும் ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் இப்படம் பல கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்தது.


இந்நிலையில் கேஜிஎஃப் 2 படம் வரும் ஏப்ரல் 14 ம் தேதி வெளியாக இருப்பதால் இப்படத்துடன் போட்டி போடாமல் பல தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் வெளியீட்டு தேதியை மாற்றி வைத்துள்ளனர். அதில் தென்னிந்திய நடிகர்களின் திரைப்படங்களும் அடங்கும்.

இந்நிலையில் தளபதி விஜய்யின் பீஸ்ட் படமும் தள்ளிப்போகும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் தற்போது பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு சினிமாத்துறையில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பலரும் கேஜிஎப் படத்துடன்  போட்டி போட விரும்பாமல் விலகி வரும் நிலையில் தளபதிவிஜய் தன் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Previous Post Next Post