அஜித் குமார் தற்போது மூன்றாவது முறையாக வினோத் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தையும், அவரின் முந்தைய படங்களை தயாரித்த போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே அஜித் தன்னுடைய அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார்.
அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார். இப்படத்தை லைகா புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அடுத்தடுத்த அறிவிப்பால் அஜித்தின் ரசிகர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் அஜீத்தின் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அவருடைய 63 வது படத்தைப் பற்றிய தகவலும் தற்போது பரவி வருகிறது.
வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் ஆகிய படங்களை இயக்கிய சிறுத்தை சிவா மீண்டும் அஜித்துடன் இணைய இருக்கிறார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. டி இமான் இசையமைக்கப் போகிறார். சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கும் சன் பிக்சர்ஸ் அஜித் படத்தையும் தயாரிக்க உள்ளது.
இப்படிப்பட்ட மெகா கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படத்தில் ஒரு பிரபல நடிகரும் இணைய இருக்கிறார். அந்தப் பிரபல நடிகர் வேறு யாருமல்ல அஜித்துடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த வடிவேலு தான். அஜித் மற்றும் வடிவேலு இருவரும் கடைசியாக ராஜா என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
ராஜா படத்தின் போது இருவருக்கும் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் அவர்கள் இதுவரை வேறு எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.
அஜித் மற்றும் வடிவேலு இருவரும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இணைந்து எந்த திரைப்படமும் நடிக்கவில்லை. தற்போது அஜித் வடிவேலுவுடன் இணைய சம்மதித்து உள்ளதாக ஒரு பேச்சு நிலவுகிறது.
