தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருப்பது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் மிகக்குறுகிய காலத்திலேயே அதிக வெற்றி படங்களை கொடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல்முறையாக நடிகர் 'சியான் விக்ரம்' படத்தை  தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் விக்ரம் நடித்த மகான் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல்   பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம், கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்பொழுது விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் 61 படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் விக்ரமின் 62வது படத்தை இயக்குவதற்கு 3 இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர். இயக்குனர்கள் மாரி செல்வராஜ், பாண்டிராஜ் மற்றும் பிஎஸ் மித்ரன் ஆகியோரில் யார் படத்தில் அடுத்து விக்ரம் நடிக்க போகிறார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் நம்ம வீட்டு பிள்ளை மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்ப்பை பெற்றது. பிஎஸ் மித்ரன் இரும்புத்திரை மற்றும் ஹீரோ இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு தற்பொழுது கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது.

 மாரி செல்வராஜ் வித்தியாசமான கதைகளை வைத்து படம் எடுக்கக் கூடியவர். சியான் விக்ரமும் இது போன்ற வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுவார். இதனால் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும். 

Previous Post Next Post