அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. இப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் எச் வினோத் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன் பின்பு அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் அஜித் குமார் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் நடிகர் இரண்டு கண்டிஷன்களை இந்த படத்திறகு போட்டுள்ளாராம்.
முதல் கன்டிஷன் எந்த காரணத்திற்காகவும் இந்த படத்தில் அரசியல் சம்பந்தமான காட்சிகள் இடம் பெற கூடாது. மேலும் வேறு எந்த கேரக்டருக்கும் அரசியல் காட்சிகள் பற்றிய ஸ்கிரிப்ட் இடம் பெற கூடாது என கூறியுள்ளாராம். ஏனென்றால் அஜித்குமாரின் படங்கள் சமீபகாலமாக அரசியல் விமர்சனங்களை சந்தித்து வருவதால் ஏகப்பட்ட சிக்கல்கள் எழுந்துள்ளதாம்.
இரண்டாவது கண்டிஷனாக, கண்டிப்பாக சென்டிமென்ட் காட்சிகள் படத்தில் இருக்க வேண்டும் என கூறியுள்ளாராம். முன்னதாக அஜித் நடித்த வலிமை,விசுவாசம் ,வேதாளம் போன்ற படங்களில் அம்மா, தங்கை போன்ற சென்டிமென்ட் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் விசுவாசம் படத்தில் அப்பா மகள் சென்டிமென்ட் காட்சிகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனால் அஜித்,விக்னேஷ் இடம் இந்த இரண்டு கன்டிஷன்களை போட்டுள்ளார்.
