தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து பிசியான நடிகராக இருப்பவர் தான் விஜய் சேதுபதி.இவர் கைவசம் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உள்ளது. இதனால் தமிழ் திரையுலகமே விஜய் சேதுபதியை மிகுந்த ஆச்சரியத்தில் பார்க்கிறது. அதில் மேலும் ஒரு ஆச்சரியமாக விஜய் சேதுபதி தற்போது நடிகர் விக்ரமுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
விக்ரமின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் மகான். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் விக்ரம் நடிப்பில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
பா.ரஞ்சித் இயக்கும் படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்பொழுது விக்ரம் நடிக்க போகும் அடுத்த திரைப்படத்தை பற்றிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த புதிய படத்தை 'காக்கா முட்டை' படத்தை இயக்கிய, இயக்குனர் மணிகண்டன் இயக்கப் போகிறார்.
சமீபகாலமாக விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே விஜய் சேதுபதி ரஜினியுடன் பேட்டை படத்திலும், விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் மற்றும் கமலுடன் விக்ரம் படத்திலும் இணைந்து நடித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
