இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிப்பு ஜாம்பவான்களான கமல்ஹாசன் , விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் அகிய மும்மூர்த்திகளை ஒரே திரையில் காட்டும் முயற்சியை கையில் எடுத்தார் லோகேஷ்.
'விக்ரம்' படத்தின் ரிலீஸ் தேதியை மார்ச் 14ஆம் தேதி காலை 7 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கமல் மற்றும் லோகேஷ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் 'விக்ரம்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தனர். அதன்படி வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி 'விக்ரம்' படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ், ஷிவானி நாராயணன், நரேன், ஜெயராம், அர்ஜூன் தாஸ், என ஏராளமான நடிகர்கள் களமிறக்கப்பட்டாலும் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோரின் காம்போதான் ஹைலைட்.
இந்த அறிவிப்பால், இப்படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கமல்ஹாசனின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.