வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2011ல் வெளியான படம் மங்காத்தா. இப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படுமா என்ற கேள்வியை அஜித்தின் ரசிகர்கள் தொடர்ந்து வெங்கட் பிரபுவிடத்தில் கேட்டு வருகிறார்கள்.
இது குறித்து சமீபத்தில் வெங்கட் பிரபு அளித்த பேட்டியில் ஒன்றில், மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை எப்போதோ தயாராகி விட்டது. அதனால் அஜித் சார் என்னை எப்போது அழைத்தாலும் உடனடியாக மங்காத்தா-2 படத்தை தொடங்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் வெங்கட்பிரபு, விஸ்வாசம் படத்திற்கு பின்பு வலிமை படம் வரை அஜித் சென்டிமென்ட் கதைகளில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் மங்காத்தா- 2 திரைப்படம் அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட கதையாக உருவாகி இருக்கிறது. அதனால் அவருடைய அழைப்புக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்தப் பேட்டியில் கூறினார்.