தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய்க்கும் அஜித்துக்கும் இடையே எப்போதும் ஒரு பனிப்போர் உண்டு. பொது இடங்களில் இருவரும் பார்த்து சிரித்து கொண்டு போஸ் கொடுத்தாலும் அவர்களிடம் எப்பொழுதுமே ஒரு போட்டி உண்டு. பல வருடங்களாக இது குறைந்தபாடில்லை.
விஜய் நடித்த படத்தை விட தான் நடித்த படம் அதிகம் வசூலிக்க வேண்டும் என அஜித்தும், அஜித் நடித்த படத்தை விட தான் நடித்த படம் அதிக வசூலை பெற வேண்டும் என விஜயும் நினைப்பதுண்டு.. இடையில் மாட்டிக்கொண்டு முழிப்பது பாவம் அவர்களின் ரசிகர்கள்தான்.
இந்த நிலையில் இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் சமீபத்தில் ஒரு யுடியுப் பேட்டியில் அஜித் பற்றிய ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். பார்த்திபனும் மற்றும் அஜித் நடித்த 'நீ வருவாய் என' படத்தை ராஜகுமாரன் இயக்கியிருந்தார் .இப்படம் 1999ம் ஆண்டு வெளியாகி வசூலில் சக்கை போடுபோட்டது.
இதுபற்றி கூறிய ராஜகுமாரன் ‘இந்த படத்தை விஜய், அஜித் என இருவரையும் வைத்துதான் முதலில் இயக்க இருந்தேன். ஆனால்,விஜய் வெறும் 15 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுப்பேன் என கூறினார். எனவேதான் அவருக்கு பதிலாக பார்த்திபனை நடிக்க வைத்தேன்.
இப்படத்தின் கதையை அஜித்திடம் கூறிய போது பார்த்திபன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னேன். ஆனால், அவர் முடியாது என மறுத்துவிட்டார். கதாநாயகனின் காதலை கதாநாயகி கடைசி வரை ஏற்கவே இல்லை. எனவே, அதில் எந்தவித ஹீரோயிஷமும் இல்லை எனக் கூறினார்.
மௌனராகம் படத்தில் இதுபோன்ற வேடத்தில் நடித்துதான் நடிகர் மோகனின் மார்க்கெட் போனது. இந்த வேடத்தில் விஜயை நடிக்க சொல்லுங்கள்’ என அவரிடம் அஜித் கூறியதாக ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.