தனுஷின் மாறன் பட ரிலீஸ் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இதனால் அவரின் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர். படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அரசியல் சம்மந்தமான ஆக்ஷன் த்ரில்லர் படம் மாறன். தொடரி மற்றும் பட்டாஸ் படங்களைத் தொடர்ந்து தனுஷ் மூன்றாவது முறையாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் உடன் கைகோர்த்துள்ள படம் இது.
தனுஷ் ,மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், ராம்கி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தனுஷ் முதல் முறையாக பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் நாளை (மார்ச் 11) நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மேலும் இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மாலையில் படத்தை ரிலீஸ் செய்தால் அதிக பார்வையாளர்கள் படத்தை பார்க்க வசதியாக இருக்கும் என ஹாட்ஸ்டார் இந்த முடிவை எடுத்துள்ளது. மாறன் படம் நேரடியாக மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறையில் ப்ரொமோஷன் செய்துள்ளது ஹாட் ஸ்டார்.
தனுஷின் 43வது படம் இந்த மாறன். இப்படத்தில் தனுஷ் இதுவரை நடிக்காத கேரக்டரை ஏற்று நடித்திருப்பதால் அவரது ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் இந்த படம் கவரும் என படக்குழு தெரிவித்துள்ளது.