இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நீண்ட நாட்களுக்குப் பின்பு வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும்  வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் AK61 படத்தின் மூலம் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.

AK61 படத்திற்காக படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்க  உள்ளதால் இப்படத்திற்கான  வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வருகிறது. AK61  படத்தில் அஜித் வில்லன் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2011 ம் ஆண்டு  இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இப்பொழுது 11 வருடங்களுக்கு கழித்து மீண்டும் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் AK61 படம்  'மணி ஹெய்ஸ்ட்' என்ற வெப்தொடரை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே  இந்தத் தொடர் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் ப்ரொஃபஸர் கதாபாத்திரத்தில் அஜித் தான் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

மணி ஹெய்ஸ்ட் வெப்தொடரின் தழுவல் தான் AK61 எனக் கூறப்படுகின்ற நிலையில் பணம் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலைவனாக நெகட்டிவ் கேரக்டரில் அஜித் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில்  இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்  பிரகாஷ்ராஜ், யோகிபாபு மற்றும் அதிதி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். மணி ஹெய்ஸ்ட் வெப்தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  பெற்றது.  அதே கதை மையமாகக்கொண்டு           AK 61 படம் எடுக்கப்படுவதால் இப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post