மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் உள்ள வேடர் புளியங்குளத்தை சேர்ந்தவர் வீரமணி.
இவர் கப்பலூர் சிட்கோ பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இதனையடுத்து கடந்த மார்ச் 2ம் தேதி தோப்பூர் அருகில் உள்ள மதுக் கடைக்கு வீரமணி மது அருந்த சென்றார். அப்போது மதுக்கடைக்கு மது அருந்த வந்த இரண்டு பேர் வீரமணிக்கு மது வாங்கி கொடுத்து அறிமுகமானார்கள்.
பின் மூவரும் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது வீரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அந்த இரண்டு பேரும் வீரமணியிடம் இருந்த ஏ.டி.எம் கார்டு, பான் கார்டு, செல்போன் போன்ற எல்லாவற்றையும் எடுத்து விட்டு ஓடிவிட்டார்கள். 2 மர்ம நபர்களும் ஏ.டி.எம் கார்டின் ரகசிய எண்ணை தெரிந்துகொண்டு ஏ.டி.எம்.மில் இருந்து 40 ரூபாய் பணத்தை எடுத்து விட்டார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக வீரமணி ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வீரமணி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நிலையூர் பகுதியை சேர்ந்த சந்திரபிரபு மற்றும் கூத்தியார்குண்டு பகுதியை சேர்ந்த அவரது நண்பர் அழகுராஜா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.