அஜித் குமார் நடித்த 'வலிமை' படம்  பிப்ரவரி 24ம் தேதி ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான படம் என்பதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலருக்கும் வலிமை படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி  மூன்றாவது முறையாக இணையும் படம் 'AK 61' ஆகும்.

வலிமை படத்தை பார்த்துவிட்டு பல  திரைத்துறை பிரபலங்களும் வலிமை படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  மேலும் சமீபகாலமாக அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.




Ak61 படத்தின் பூஜை இன்று மார்ச் 9ஆம் தேதி நடைபெற்றுள்ளதாகவும், மார்ச் 18ல் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகியாக நயன்தாரா அல்லது அதிதி ராவ் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்காக பிரம்மாண்ட செட்டை 'AK 61' படக்குழுவினர்  ஹைதராபாத்தில் அமைத்துள்ளனர். விரைவில்  இப்படத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு AK 61' படத்தினை தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.



இந்தப்படத்தில் 'பிக்பாஸ்' கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வந்துள்ளது. மேலும் இந்த படம் வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி உருவாகவுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அஜித், இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் 25 கிலோ வரை எடையை குறைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post