இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூல் சாதனை படைத்தது. அதனால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற முடிவில் உள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் தலைவர் 169 படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. முதல்முறையாக சூப்பர் ஸ்டாரும் நெல்சன் கூட்டணி அமைத்துள்ளதால் 'தலைவர் 169' படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினிக்காக நெல்சன் கதையில் சில மாற்றங்கள் செய்து உள்ளதாகவும், இப்படம் எந்த ஒரு பாடலும் இல்லாமலும், ஒரு சில சென்டிமென்ட்டு காட்சிகள் மட்டும் எடுக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
தலைவர் 169 படத்தில் சூப்பர் ஸ்டார் மோசமான வில்லன் கேரக்டரில் நடிக்க உள்ளாராம். இந்த கேரக்டர் இன்டர்நேஷனல் டான் அளவிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் இந்தப் படத்திற்கு செம கெத்தான டைட்டில் வைக்க வேண்டுமென இயக்குனர் முடிவு செய்துள்ளார்.
தற்போது இப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. தலைவர் 169 படத்திற்கு 'பாஸ் ' என்று பெயர் வைக்கலாம் என கூறுகிறார் இயக்குனர் நெல்சன். 2006 ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி ' படத்தில் ரஜினி மொட்டை பாஸ் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அந்த கேரக்டர் இன்றளவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, பேசப்பட்டு வருகிறது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தலைவர் 169 படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பதாக இருந்தால் கேங்ஸ்டர், ஹன்டர்,லீடர், ஸ்டைல் இவற்றில் ஏதாவது ஒன்றை வையுங்கள் என்கின்றனர் சூப்பர் ஸ்டார்ன் தீவிர ரசிகர்கள. இனி முடிவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கையில்தான் உள்ளது.
