தமிழ் சினிமாவில் கால்சீட் சொதப்பல் என்பது காலங்காலமாக நடந்து வருகிறது.சில நடிகர்கள்  செய்து வருகின்ற தவறுகளில் இது முக்கியமான ஒன்றாகும்.

அந்த காலத்திலிருந்தே பலர்  இந்தத் தவறை செய்திருக்கின்றனர் அதற்கு ஒரு லிஸ்டே போடலாம். ஆனால் அதில் நமக்கெல்லாம் தெரிந்தவர் என்றால் அது நம்ம மாநாடு ஹீரோதான்.

படப்பிடிப்பிற்கு  சரியாக வருவதில்லை, அவர் வாங்கிய அட்வான்ஸ் பணம் திரும்ப  வாங்க முடியாது ,படத்தை சரியான நேரத்தில் வெளியிட முடியாது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து.

இதனால் சிம்புவுக்கு ரெட் கார்ட் கொடுக்கும் அளவிற்கு பிரச்சனை பெரிதாக வெடித்தது. அதன் பிறகு சுதாரித்து கொண்ட சிம்பு, தனது போக்கை மாற்றி  மீண்டும் பழைய சிம்புவாக  இயங்கி வருகிறார்.

ஆனால், நன்றாக நடித்து கொண்டிருந்த விஷால் தற்போது சிம்பு போல கால்ஷீட்டில் சொதப்ப தொடங்கிவிட்டார். 



ஆம் அவரது நண்பர் தயாரிப்பில் லத்தி எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக விஷால் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு, ஹிந்தி என 3  மொழிகளில் வெளியாக உள்ளது.

லத்தி திரைப்படத்திற்காக விஷால் 25 நாட்கள் கால்சீட் கொடுத்து அதை வீணடித்துள்ளாராம்.

ஷூட்டிங்கிற்கு எல்லாம் ரெடி செய்து வைத்துவிட்டு விஷாலுக்காக படக்குழுவினர் காத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் கடைசி நேரத்தில் விஷால்  படப்பிடிப்பிற்கு வரமாட்டாராம்.

இதனால் அன்றைய நாள் ஷூட்டிங்கிற்கு தயாரிப்பாளர் செய்த செலவு  வீணாகி போனதுதான் மிச்சம். இப்படியே 25 நாட்கள் நடந்துள்ளதாம்.


நண்பர் தயாரிக்கும் படத்திலேயே இப்படி  செய்திருக்கிறார் என்றால் மற்ற தயாரிப்பாளர் படத்தில்  என்ன என்னவெல்லாம் செய்வாரோ என்று கோலிவுட்டில் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Previous Post Next Post