தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ்.
இவர் அஜித்தை வைத்து இயக்கிய தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.
இவர் தளபதி விஜய்யை வைத்து கத்தி துப்பாக்கி, சர்கார் என்ற 3 மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அதேபோல் சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்திலும் சூப்பர் ஸ்டாருடன் தர்பார் படத்திலும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
முருகதாஸ் இயக்குனராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்துள்ளார்.
அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, மான் கராத்தே, ரங்கூன் போன்ற பல வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளார் ஆர் முருகதாஸ்.
தற்போது முருகதாஸ் அடுத்த படத்தை இயக்க துவங்கியுள்ளார். இப்படத்தை இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். இப்படத்தை ஏ ஆர் முருகதாசிடம் உதவியாளராக இருக்கும் பொன்குமார் இயக்க உள்ளார்.
இந்தத் திரைப்படம் நகைச்சுவை கலந்த இந்தியன் ஃபேன்டஸி மற்றும் அதிக கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட படமாகவும் தயாராக உள்ளது. இதனால் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கௌதம் கார்த்திக் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். ஒரு புதுமுக நடிகை கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக அறிமுகமாக உள்ளார்.
தற்பொழுது முன்னணி நடிகர்களாக வலம் வரும் யாரும் ஏ ஆர் முருகதாஸ்க்கு வாய்ப்பு கொடுப்பது போல தெரியவில்லை.
முன்னணி ஹீரோக்களான ரஜினி, விஜய், மகேஷ்பாபு போன்ற நடிகர்களிடம் கதை கூறிவிட்டு காத்துக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் தன்னுடைய இயக்கத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும் தான் தயாரிக்கும் அடுத்த படத்தின் மூலம் ரசிகர்களை திருப்திப்படுத்த முயற்சிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.