குறைந்த பட்ஜெட்டில் சுவாரஸ்யமான கதைகளை தேர்ந்தெடுத்து அதனை சுவாரஸ்யம் குறையாமலும் அதே நேரத்தில் கலகலப்பாகவும் சொல்வதில் வல்லவர் இயக்குனர் சுந்தர்.சி.
இவரது இயக்கத்தில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம் , அன்பே சிவம், கலகலப்பு என இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போதும் இவர் அரண்மனை,அரண்மனை2,அரண்மனை3 என ஹிட் கொடுத்து வருகிறார்.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில் தனது திரை அனுபவங்களை எந்தவித ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியது,, நான் ஹீரோக்களை மனதில் வைத்து கதை எழுத மாட்டேன். முதலில் கதை எழுதி விடுவேன்.
பின்னர் அந்த கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று நாயகரை தேடி, அவரிடம் கதை கூறி ஓகே செய்து விடுவேன்.
இவ்வாறுதான், உள்ளத்தை அள்ளித்தா படம் எழுதி முடித்துவிட்டு நடிகர் கார்த்திக்காக காத்திருந்தேன்.
ஆனால், தயாரிப்பாளரோ தளபதி விஜய்யை பரிந்துரை செய்து அவரிடம் கதை கூறுங்கள் அவரை வைத்து படத்தை இயக்கி முடித்து விடலாம் என்று கூறினார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
நல்ல வேலையாக அப்போது தளபதி விஜய் வேறு ஒரு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் நான் தப்பித்து கொண்டேன்.
பின்னர் நடிகர் கார்த்தி ப்ரீயாக இருக்கிறார் என்று தெரிந்ததும், தயாரிப்பாளர் அவரிடம் கால்ஷீட் வாங்கி கொடுத்தார்.
நானும் திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்தேன்.படம் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
அந்த கதாபாத்திரத்தில் கார்த்தி தான் நடிக்க வேண்டும். அதில் விஜயை வைத்தாள் அவருக்காக கதையில் மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்.அப்படி செய்தால் சிக்கலாகிவிடும் என வெளிப்படையாக கூறினார்.
மேலும், இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு ஒரு அறிவுரையும் கூறினார்.
முதலில் நல்ல கதை எழுதிவிடுங்கள். பின்பு அந்த கதைக்கு எந்த ஹீரோ பொருத்தமாக இருப்பார் என்று தேடி தேர்ந்தெடுங்கள். ஹீரோக்களுக்காக கதை எழுதி அவர் நடிக்கவில்லை என்றால் பின்பு சிக்கலாகிவிடும். என பேசினார்.