தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே இவர் இன்னமும் வசூல் நாயகனாக வலம் வருகிறார். ஆரம்பகாலத்தில் இவருடன் நடித்த நடிகர்கள் பலர் சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டனர் .
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதிலும் இன்னமும் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்பொழுது இருக்கும் இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
அந்தவகையில் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் "தலைவர் 169" படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்திற்கான அறிவிப்பு வீடியோ வாயிலாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் படிப்படியாக நடக்கத் தொடங்கிவிட்டது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இந்த வருட தீபாவளிக்கு கொண்டு வந்துவிடலாம் என கணக்குப் போட்டுள்ளது அந்த நிறுவனம்.
அந்த வகையில் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக யாரைப் போடலாம் என நெல்சன் குழப்பத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டாரோ நடிகை ஐஸ்வர்யா ராய் இடம் பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கலாம் என கேட்டுள்ளாராம்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் மற்றும் ஐஸ்வர்யாராய் இணைந்து நடித்து வெளியான எந்திரன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினியும் 40 வயதுக்கு குறைவாக உள்ள நடிகைகள் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
அந்த வகையில் உலகம் முழுவதும் தெரிந்த நடிகையாகவும் இருக்க வேண்டும் அதே சமயத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்தால் வயது தெரியாத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஐஸ்வர்யாராயை பரிந்துரை செய்துள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
ஐஸ்வர்யாராயை கொண்டு வந்தால் அவருக்கு சம்பளமாக மட்டுமே 10 கோடிக்கு மேல் தர வேண்டியிருக்கும். சில லட்சங்களில் நல்ல நடிகைகள் இருக்கும் நிலையில் ஐஸ்வர்யாராயை கொண்டு வந்தால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகும் என்ற யோசனையில் இருக்கிறதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடித்தால் இப்படம் இன்னமும் சூப்பராக ஹிட் அடிக்கும் என்ற எண்ணம் இருக்கிறதாம்.
இதனால் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஐஸ்வர்யா ராயிடம் சம்பளம் பற்றிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
சம்பளம் கட்டுபடி ஆனால் மட்டுமே ஐஸ்வர்யாராய் இந்தப்படத்தில் இருப்பாராம் இல்லை என்றால் கிடையாது என்பதையும் ரஜினியிடம் தெளிவாகக் கூறி விட்டார்களாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.