தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்.
கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளியான டாக்டர் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது "டான்" படத்தில் நடித்துள்ளார்.
டான் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
இப்படத்தில் ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யாவும் நடித்துள்ளனர்.
டான் படத்தை லைகா புரொடக்ஷன் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ் கே புரோடக்சன் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தை மார்ச் 25ம் தேதி வெளிவரும் என அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டனர்.
இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படமும் அதே தேதியில் (மார்ச் 25) வெளியாக உள்ளது.
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப்போனதால் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இப்பொழுது டான் மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய இரண்டு படங்களுமே லைகா விடம் உள்ளது.
சிவகார்த்திகேயனின் நடித்த டான் படத்தின் மொத்த பட்ஜெட் 45 கோடி ஆகும். டான் படத்தின் சேட்டிலைட் உரிமம் போன்றவை 100 கோடிக்கு மேல் லாபம் பார்த்துள்ளது.
இதனால் லைகா நிறுவனம் சிவகார்த்திகேயனிடம் டான் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்குமாறு கேட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனால் தான் டான் படம் லாபம் பார்த்தது என்பதால் தயாரிப்பாளர் இயக்குனரை விட சிவகார்த்திகேயன் சம்மதித்தால் மட்டுமே தான் இப்படத்தில் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்படும் எனக் கூறினார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் டான் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்க ஒப்புக்கொண்டார்.
அதனால் டான் படம் மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் லைக்கா நிறுவனம் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.