மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி(F23 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன்  வெளிவந்துள்ளது. இப்போது  எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை பார்ப்போம்.



4/128 மற்றும் 6/128
4ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி(F23 5G) ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,499-ஆக உள்ளது.
அதேபோல் இதன் 6ஜிபி,128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி(F23 5G) ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,499-ஆக உள்ளது.
மார்ச் 16-ம் தேதி பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.18,499-ஆக உள்ளது.

அறிமுக சலுகை
இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக சலுகையாக 4ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட  கேலக்ஸி எஃப்23 5ஜி மாடலை ரூ.14,999-விலையிலும், 6ஜிபி,128ஜிபி மெமரி மாடலை ரூ.15,999-விலையிலும் வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் முழு HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.6" LCD ஐக் கொண்டுள்ளது.கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியமான அம்சங்களுடன் இந்த ஸமார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதி உள்ளது.  மேலும் One UI 4.1சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.



சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி f/1.8 மெயின் கேமரா , 8எம்பி f/2.2 அல்ட்ராவைடு 123 டிகிரி FoV மற்றும் 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன.
செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உள்ளது. பின்பு பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.



மேலும் நீண்ட நேரம் கேம் விளையாட 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, அடாப்டிவ் பவர் சேவிங் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

5ஜி, 4ஜி எல்டிஇ, Wi-Fi 802.11, ப்ளூடூத் v5.00, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், கைரேகை சென்சார் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Previous Post Next Post