நடிப்பின் நாயகன் என்றாள் அது சூர்யாதான். இப்பொழுது இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்  எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இந்தப் படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.
ஜெய்பீம் என்ற படத்தின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் சூர்யா. 

ஜெய்பீம் படத்திற்கு பின் அவருடைய அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே மட்டுமின்றி சினிமா வட்டாரத்திலும் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படி இருக்கையில் சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி இணையத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இதற்கு முன்னால்  நந்தா மற்றும் பிதாமகன் படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றினார்கள். இந்த இரண்டு படங்களும் சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது. சூர்யாவின் நடிப்பு திறமையை வெளிக் கொண்டு வந்ததில் இயக்குனர் பாலாவிற்கு முக்கியமான பங்கு உள்ளது.


சிந்திக்கக் கூட முடியாத கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்து முடித்தார்  சூர்யா. மீண்டும் இவர்கள்  கூட்டணியில் ஒரு படம் வெளிவர இருக்கிறது இப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க வில்லை என்றால் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட்  மூலம் இப்படம்  தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவுடன் ஜோதிகா இணைந்து நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள்  தொடங்கி விட்டதாக  கூறுகின்றன. இயக்குனர் பாலா விருதுகளுக்காக வும் வசூலுக்காக வும்  படம்  எடுப்பது இல்லை. அவரின் திரைப்பட பாணியும் திரைக்கதையை அணுகும் முறையும் சற்று வித்தியாசமாகவே இருக்கும்.


சூர்யாவின் திரை வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய  படம் என்றால் அது  நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய இரண்டு படங்களும் தான். அதுபோலவே  இந்தப்படமும்  மிகப்பெரிய வெற்றிப் படமாகும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

பாலா இயக்கும் படங்களில் பெரிய பெரிய ஹீரோக்கள் நடிக்க  தயக்கம் காட்டுவார்கள். இப்படி இருக்கும் நிலையில் விக்ரம் மற்றும் சூரியா இருவரும் பிதாமகன் படத்தில் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க காரணமாக இருந்தது அந்த படத்தின் இயக்குனர் பாலா என்பதால்தான்.

நான் கடவுள்   படத்தில் ஆர்யா, பரதேசி படத்தில் அதர்வா ,அவன்-இவன் படத்தில் விஷால் மற்றும் ஆர்யா என இன்றுவரை நம் மனதில் பல கதாபாத்திரங்கள் அப்படியே நிலைத்து நிற்கின்றது என்றால் அது  இயக்குனர் பாலாவின் கைவண்ணம்தான்.
அந்த வரிசையில்  மீண்டும் சூர்யா மற்றும் பாலா , வெற்றி கூட்டணி இணைய இருக்கிறது.

Previous Post Next Post