இரண்டு  வருட காத்திருப்பிற்கு பிறகு அஜித்தின் வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி  வெளியாக உள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்துடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர்.

கொரோனா காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் தேதி ஒவ்வொருமுறையும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இப்பொழுது திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி  வழங்கப்பட்ட பின்பு இப்படத்தின் தயாரிப்பாளரான  போனிகபூர் பிப்ரவரி 24ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக  அறிவித்தார்.

வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. அதனால் இப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் அஜீத் நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.



இப்படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்டு  பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக உள்ளது. இப்படத்தின் அப்டேட்டுகள் தினமும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இப்படத்தின் டீசர், ப்ரோமோ, வீடியோ என அனைத்தும் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

வலிமை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும்  32 கோடி வரை வசூல் செய்யும் என்று கூறுகிறார்கள். இப்படம் இந்தியாவில் மட்டுமில்லாமல் சவுதியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.
இதேபோல் மற்ற மாநிலங்களிலும் பல்வேறு தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளது அதனால் முதல் நாளிலேயே வலிமை படம் வசூல் சாதனை படைக்கும்.

Previous Post Next Post