தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

இவர் முன்னதாக நயன்தாரா மற்றும் யோகிபாபு வைத்து கோலமாவு கோகிலா என்ற ஹிட் படத்தை கொடுத்தார். அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற மெகா ஹிட் படத்தையும் கொடுத்துள்ளார்.

இப்பொழுது தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இந்தப் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது இப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத் இசையில் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் ப்ரோமோ வீடியோ  வெளியாகி செம வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்தப் பாடலில் வரும் "ஹலமத்தி ஹபிபோ" என்ற ஒரே ஒரு வரியை மட்டும் ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.

இதனிடையே தற்போது அந்த பாடலுக்கு அர்த்தம் கண்டு பிடித்து ரசிகர்கள் அதை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

அதன்படி "ஹலமத்தி ஹபிபோ" என்றால்         "I dreamed of my lover" என அர்த்தம் வருகிறது. அதனை கண்டு பிடித்த ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வைரலாக்கி வருகின்றனர்.

Previous Post Next Post