கர்நாடகாவில் 50 ரூபாய் மதிப்புள்ள கிரிக்கெட் பந்து வாங்கிய தகராறில் கிராமத்தினர் இரு தரப்பாக பிரிந்து மோதிக்கொண்டனர்.
கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் கோபுர கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக வரவு செலவு குறித்து இளைஞர்கள் விவாதித்தனர்.
அப்போது கிரிக்கெட் பந்து வாங்கியதற்கான தொகை யார் கணக்கில் சேர்ப்பது என்பதற்கான விவாதம் கருத்து மோதல் ஆகி பின்னர் கைகலப்பு ஆனது.
இரு குழுக்களிலும் உள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக ஆண்கள் பெண்கள் என அவர்களின் குடும்பத்தினர் சேர்ந்து நடுரோட்டில் சரமாரியாக கம்பு, கைகளில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
50 ரூபாய் கிரிக்கெட் பங்கிற்காக ஒரு கிராமமே கலவரத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.