நடிகர் ஜெயம்ரவி வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியன் செல்வன் படத்தில் நடித்துள்ளார். மேலும் ஜன கன மன என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பூலோகம் படத்தை இயக்கிய இயக்குனர் என் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி மீண்டும் நடிக்கப் போகிறார். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
பிரமாண்ட தயாரிப்பில் ஜெயம்ரவி:
ஜெயம் ரவிக்கு "கோமாளி" படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான அவரது 25வது படமான "பூமி" எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் ஜெயம் ரவி அடுத்ததாக ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். இப்பொழுது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகிவரும் "பொன்னியின் செல்வன்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம்ரவி "அருள்மொழிவர்மனாக" நடித்து வருகிறார்.
ஜெயம் ரவி பாக்ஸராக:
ஒரே மாதிரியான படங்களை கொடுக்காமல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு வழங்கிவரும் ஜெயம் ரவி "ஜனகனமன" என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில் இப்பொழுது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயம் ரவி "பூலோகம்" படத்தை இயக்கிய இயக்குனர் என் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் இணைய உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய "எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி" படத்தில் ஜெயம் ரவி பாக்ஸராக நடித்திருந்தார்.
இந்த படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி மீண்டும் பாக்ஸராக நடித்த திரைப்படம் "பூலோகம்" வடசென்னையில் வாழ்ந்த பிரபல குத்துச்சண்டை வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது பூலோகம் திரைப்படம்.
தாமதமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ஜெயம்ரவி முரட்டுத்தனமான குத்து சண்டை வீரராக பிரமாதமாக நடித்திருந்தார்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:
இந்நிலையில் மீண்டும் இயக்குனர் என் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு அகிலன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அகிலன்:
தற்பொழுது வெளியாகியுள்ள அகிலன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடுக்கடலில் கப்பலில் கொக்கியை பிடித்தவாறு ஜெயம் ரவி நின்று கொண்டிருக்கிறார் .
மேலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் "இந்தியப் பெருங்கடலின் ராஜா" ( KING OF THE INDIAN OCEAN) என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் நடிக்கிறார். அகிலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இப்பொழுது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.