சியான் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள மகான் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து சியான் விக்ரமின் அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இன் இயக்கத்தில் நடிக்கப்போவதாக கூறப்பட்டுள்ளது.
மகான் திரைப்படம்:
நடிகர் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் உருவான படம் "மகான்". இந்தப் படத்தில் தனது மகன் துருவ் விக்ரம் மற்றும் சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்களுடன் இணைந்து அவர் நடித்திருந்தார்.
இந்தப் படம் (10-02-2022) நேரிடையாக அமேசான் பிரைம் இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் வெளிவந்த முந்தைய படமான ஜகமே தந்திரம் படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.
விக்ரம் மற்றும் பா.ரஞ்சித் கூட்டணி:
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இந்தப்படத்தை
ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார். இதன் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் இந்த கூட்டணி 8 வருடங்களுக்கு முன்பே இணைந்திருக்கவேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
8 வருட காத்திருப்பு:
இயக்குனர் ரஞ்சித்தின் மெட்ராஸ் படம் ரிலீசுக்கு அடுத்ததாகவே ரஞ்சித், விக்ரமை சந்தித்து கதை கூறி நடிப்பதற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.
அதே நேரத்தில் ரஞ்சித்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை (கபாலி) இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் விக்ரமை இயக்கும் வாய்ப்பு கைகூடாமல் போயுள்ளது. மேலும் ரஞ்சித் தொடர்ந்து காலா, சார்பட்டா பரம்பரை என்று பிசியாகி விட்டதாலும் இந்த கூட்டணிக்கு வாய்ப்பில்லாமல் போனது.
இப்பொழுது எட்டு வருடம் கழித்து இந்த கூட்டணி இணைய உள்ளது.
சிறப்பான காம்பினேஷன்:
விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பு சூறாவளி விக்ரம், ரஞ்சித் இயக்கத்தில் இணைந்தால் அது சிறப்பான காம்பினேஷனாகவே இருக்கும்.