தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்களின் முந்தைய படங்கள் அதிக வசூல் சாதனை படைத்து விட்டால் அவர்கள் அடுத்த படத்திலேயே சம்பளத்தை அதிகமாக கேட்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த நடிகர்களின் மார்க்கெட் அதிகரித்துவிடுகிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் 5 நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் :
சூப்பர் ஸ்டார் படம் என்றாலே அவரின் ரசிகர்களுக்கு திருவிழா தான்.
ரஜினிகாந்த் தற்பொழுது தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோக்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
இவர் நடித்த எந்திரன், 2.0, கபாலி படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது ஒரு படத்திற்கு 110 கோடியிலிருந்து 115 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
தளபதி விஜய் :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்ததாக அதிக வசூல் சாதனை படைப்பது இவருடைய படங்கள் தான்.
இவர் நடித்த தெறி, பிகில், மெர்சல் மற்றும் மாஸ்டர் போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. அதனால் இவருடைய மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. தற்போது விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் 100 கோடியில் இருந்து 110 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளமாக பெறுகிறார்.
அஜித் குமார் :
நடிகர் அஜித்தின் படங்கள் என்றாலே அவரின் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் பில்லா படத்திற்கு பின்பு பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ளவர் அஜித்.
இவருடைய படங்கள் எப்பொழுதும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெறுகிறது. எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வலிமை மற்றும் போனி கபூர் உடன் மீண்டும் ஒரு படம் என மூன்று படத்திற்கும் போனி கபூர் அஜித்தை 200 கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்துள்ளார் .
உலகநாயகன் கமலஹாசன் :
கமலஹாசனின் அதிகமான படங்கள் தமிழ் மொழியில் அல்லாமல் மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி அடையும். அதுமட்டுமின்றி பிற மொழி படங்களில் நடித்ததற்காக விருது வாங்கியவர் கமலஹாசன் தான்.
தற்போது அவர் நடிப்பில் இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. கமல்ஹாசன் 30 கோடியில் இருந்து 55 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளமாக பெறுகிறார்.
சூர்யா :
ரஜினி, விஜய், அஜித்துக்கு அடுத்தப்படியாக அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சூர்யா தான்.
அவருடைய நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்திற்கு மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது.
தற்பொழுது சமீபத்தில் அமேசான் பிரைம் இல் வெளியான ஜெய்பீம் படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா நடிக்கும் ஒரு படத்திற்கு 35 கோடியில் இருந்து 45 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
தனுஷ் :
தனுஷ் தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனால் இப்பொழுது தனுஷின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.
தனுஷ் ஒரு படத்தில் நடிப்பதற்கு 20 கோடியில் இருந்து 50 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.