சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையில் அதிக அளவில் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உள்ளது. அந்த வகையில் தற்பொழுது ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 மற்றும் நோட் 11S ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளன.

ரெட்மி நோட் 11 மற்றும் நோட் 11S அறிமுகம் :
ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 மற்றும் நோட் 11S ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த இரண்டு மாடல்களும்  முன்னதாகவே  சியோமி நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10S ஆகிய இரண்டு மாடல்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் என்பது குறிப்பிடதக்கது. கடந்த மாத இறுதியில் ரெட்மி நோட் 11 மற்றும் நோட் 11S  ஆகிய இரண்டு மாடல்களும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.  அதேபோல் தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகிவிட்டது.

அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11 மற்றும் நோட் 11S மாடல்களில் 6.43 இன்ச் பன்ச் ஹோல் ரக  AMOLED மற்றும் Full HD+டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் உள்ளது. 

அதேபோல் ரெட்மி நோட் 11S மாடலில் மீடியாடெக் ஹீலியோ G96 என்ற பிராசஸர்  புதிதாக அறிமுகமாகியிருக்கிறது.

கேமரா :
புகைப்படங்கள் எடுக்க இந்த இரண்டு மாடல்களிலும் 8MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 11 மாடலில் 50MP கொண்ட பிரைமரி கேமரா உள்ளது மற்றும் 13MP கொண்ட செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல் ரெட்மி நோட் 11S மாடலில் 108MP கொண்ட பிரைமரி கேமராவும் 16MP கொண்ட செல்ஃபி  கேமராவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நெட்வொர்க் மற்றும் கனெக்டிவிட்டி :

இரு மாடல்களிலும் டூயல் சிம் கார்டு ஸ்லாட் (Dual Sim Card Slot), 4ஜி(4G) மற்றும் டூயல் பேண்ட் வைபை (Wifi), ப்ளூடூத் 5(Bluetooth 5)வழங்கப்பட்டு இருக்கிறது.

செக்யூரிட்டி :

கைரேகை சென்சார்( Finger Print) பக்கவாட்டில்  வழங்கப்பட்டுள்ளது. மற்றும் ஏ ஐ  ஃபேஸ் அன்லாக்(AI Face Unlock) உள்ளது.

ஆடியோ :

மேலும் இத்துடன் 3.5mm ஹெட்போன் ஜாக் (3.5mm headphone jack),டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) பொருத்தப்பட்டுள்ளது.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் :

இந்த இரண்டு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 13 வழங்கியுள்ளனர்.

பேட்டரி மற்றும் சார்ஜர் :

மேலும் இத்துடன் 5000mAh பேட்டரி மற்றும் 33 வாட் ஃபாஸ்ட் USB-C டைப் சார்ஜிங்  வசதியும் உள்ளது.



Redmi Note11 விலை விவரங்கள்  மற்றும் நிறங்கள் :
4GB + 64GBஸ்டோரேஜ் – ரூ. 13,499யும்
6GB + 64GBஸ்டோரேஜ் – ரூ. 14,499யும்
6GB + 128GBஸ்டோரேஜ்– ரூ. 15,999க்கும் விற்பனையாகிறது.

ரெட்மி நோட் 11ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஹாரிசான் புளூ நிறங்களிலும் கிடைக்கிறது.



Redmi Note11S விலை விவரங்கள்  மற்றும் நிறங்கள் :
6GB + 64GB ஸ்டோரேஜ் – ரூ. 16,499
6GB + 128GB ஸ்டோரேஜ் – ரூ. 17,499
8GB + 128GB ஸ்டோரேஜ்– ரூ. 18,499க்கும் விற்பனையாகிறது.

ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக், ஹாரிசான் புளூ மற்றும் போலார் வைட் நிறங்களில் கிடைக்கும்.


Previous Post Next Post